கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த 3 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த 3 பேர் கைது
X
கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் 21.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை சோழிங்கநல்லூர், நேரு தெருவில் கடந்த 1 மாத காலமாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இது குறித்து இரகசிய தகவல் துரைப்பாக்கம் போலீசாருக்கு கிடைத்தது. அதனடிப்படையில் துரைப்பாக்கம் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டினுள் சோதனையிட்ட போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அங்கு தங்கியிருந்த திரிபுராவை சேர்ந்த கபீர் உசேன்(22), தாஜில் இஸ்லாம் சைமன்(26), மைனுதீன் புஹியா(22), ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்து உடன் கஞ்சாவையும் விற்று வந்தது தெரியவந்தது.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுடன் கஞ்சா விற்பனையில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products