சோழிங்கநல்லூரில் பட்டபகலில் பூட்டிய வீடுகளில் திருடும் திருடர்கள் கைது

சோழிங்கநல்லூரில் பட்டபகலில் பூட்டிய வீடுகளில் திருடும் திருடர்கள் கைது
X

செம்மஞ்சேரி போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருடர்கள்.

சோழிங்கநல்லூரில் பட்டபகலில் பூட்டிய வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி(32), இவர் கடந்த 3ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது டிவி, தங்க கம்மல், வெள்ளி அரைஞான் கொடி ஆகியவை திருடுபோயிருந்தது.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் குமரன்நகர் சந்திப்பில் நடந்து வந்த இருவரை மடக்கி போலீசார் விசாரணை செய்ததில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்துவிசாரணை செய்தனர்.

விசாரணையில் கேளம்பாக்கத்தை சேர்ந்த பவன்சிங்(35), ஜெகதீஸ் சிங்(32), என்பதும் இருவரும் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது. மேலும் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கொள்ளையடித்ததும் தாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர்.
இருவருடமிருந்து 3 டிவி, கம்மல், இரண்டு செல்போன், வெள்ளி அரைஞான் கொடி, ஹோம் தியேட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இருவர் மீதும் ஏற்கனவே மூன்று கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story