கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் மழையால் பாதித்த மக்களை சந்தித்தார்
கேளப்பாக்கத்தில் மழையால் பாதித்த பகுதிகளை ஒன்றிய கவுன்சில் திவ்யா வினோத் நேரில் பார்வையிட்டு உடனடி தீர்வுக்கு வழி வகுப்பதாக கூறினார்.
செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் கடந்த சிலதினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. ஊராட்சி முழுவதும் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 12.00மணியிலிருந்து மாலை 03.00மணிவரை கேளம்பாக்கம் ஒன்றியகவுன்சிலர் .திவ்யா வினோத் கன மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.
முதலவதாக 8வதுவார்டு உறுப்பினர் ஜெயசித்ராஜாப்பிரின் முன்னிலையில் நந்தனா நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெள்ளத்தை பார்வையிட்டார்.
அடுத்தாக 4வது வார்டு உறுப்பினர் வானதிசுகு முன்னிலையில் மாதாகோவில் தெருவில் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து 5வது வார்டு உறுப்பினர் பழனி முன்னிலையில் நடைப்பெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
இறுதியாக 7வார்டு உறுப்பினர் கலாவதி தணிகாசலம் முன்னிலையில் ஶ்ரீநகர் ,கணபதி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளத்தால் பாதித்த அனைத்து தெருக்களையும் பார்வையிட்டு பொதுமக்களிடையே பேசி அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்து .உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணுவதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
நடைப்பெற்ற ஆய்வு குறித்து கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் திவ்யாவினோத் கூறுகையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கன மழையால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ,திருப்போரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆகியோர்களிடம் முறையாக கோரிக்கை மனுவாக வழங்கி உடனடிதீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கேளம்பாக்கம் ஸ்டீபன் ,சக்திகுமார் , எட்வின் ,காளிமுத்து , பாரத் ,அபித் , ஜான் திவாகர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu