இறப்புக்கு முன் பாசிட்டிவ்... இறந்த பிறகு நெகட்டிவ்... sms பரபரப்பு!
கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் பெண் உமா
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன்(35). இவரது மனைவி உமா(33) . இரண்டு மகன்களோடு இவர்கள் கண்ணகி நகரில் வசித்து வந்தனர். உமாவிற்க்கு லேசானா காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உமா கொரானா பரிசோதனை செய்துள்ளார்.
பின்னர் சென்னை மாகராட்சியில் இருந்து பணியாளர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிடிவ் ஆகியிருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழிந்ததால் சென்னை மாநகராட்ச்சி சார்பில் உமாவின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உமாவின் செல்போனுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுடைய மாதிரியை கோவிட் 19 பரிசோதனை செய்ததில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக குறுச்செய்தி வந்தை கண்ட கணவர் பரமேஷ்வரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பரமேஷ்வரன் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்ட போது தவறுதலாக குறுஞ்செய்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இருந்து இருவேறு செய்திகள் தங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதால் தன் மனைவி கொரானா தொற்று பாதிக்கப்பட்டு தான் இறந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதற்ககு சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துமனை இரண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என பரமேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu