சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர்
சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 27ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சர்வதேச சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, அந்தமான் நிக்கோபர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 356 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.
இப்போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 21-வயதான ஹிர்த்திகேஷூக்கு ரூ. 25,000 ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதேபோல் இரண்டாம் இடத்தை காரைக்குடியை சேர்ந்த 20-வயது கண்ணனுக்கு ரூ. 20,000 ரொக்கப்பணமும், மூன்றாம் இடம் பிடித்த பத்ரிநாராயணனுக்கு ரூ.15,000 ரொக்கப்பணம் உள்ளிட்ட 54-நபர்களுக்கு ரூபாய் 20,3000 ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கினார்.
8-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கலந்துகொண்ட தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரை சேர்ந்த ஷர்வானிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது சதுரங்க விளையாட்டில் ராஜா ராணியை காக்க சிப்பாய்கள் இருப்பார்கள், அதைப்போல வருங்காலத்தில் ஆளப்போகும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ராஜா ராணிக்கள், அவர்களை பள்ளி கல்வித்துறையில் காக்கும் சிப்பாய் தான் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்றார்.
மேலும் 44 வது சதுரங்க ஒலிம்பிக் போட்டியை நடத்த உலகம் நாடுகள் போட்டிக் கொண்டிருந்த நிலையில் அதை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை முதல்வரை சாரும் என குறிப்பிட்டார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவிகளிடையே செஸ் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை மகாபலிபுரத்தில் நடைபெறயிருக்கும் செஸ் ஒலிம்பிக் போட்டியை காண வைத்து, அந்த விளையாட்டு வீரார்களுடன் கலந்துரையாட வைக்க உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu