முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல் மூலம் விழிப்புணர்வு

முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல்  மூலம் விழிப்புணர்வு
X
கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்

முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து கானா பாடல் பாடி பொது மக்களிடையே கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒமைக்கரான், கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில் தொற்று பரவலின் தாக்கம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் பற்றிய கானா பாடல்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கியும் கையில் பதாகையினை ஏந்தியவாறும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடும்படி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!