சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது

சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது
X

சென்னை செம்மஞ்சேரியில் கண்ணாடி உடைந்த அரசு பஸ்.

சென்னை செம்மஞ்சேரியில் மாநகர பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்தது சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை செம்மஞ்சேரி ஆர்ச் அருகில் மாநகராட்சி பேருந்து தடம் எண் 119, பெரும்பாக்கத்திலிருந்து, கிண்டி வரை செல்லும் பேருந்து, சம்பவ இடத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த போது பின்பக்க படிக்கட்டின் பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடி திடீரென உடைந்து சாலையில் கண்ணாடி துகள்கள் கொட்டியது.இதனால் பயணிகளை நடத்துனர் இறக்கிவிட்டு பேருந்தை பெரும்பாக்கம் பணிமனைக்கு எடுத்துச் சென்றார். இது குறித்து பணிமனை மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கண்ணாடி உடைந்தது எப்படி என தெரியவில்லை என்றார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!