துரித உணவகத்தில் பயன்படுத்தும் கரண்டியை வைத்து உரிமையாளர் செய்த செயல்

துரித உணவகத்தில் பயன்படுத்தும் கரண்டியை வைத்து உரிமையாளர் செய்த செயல்
X

கரண்டியை வைத்து துரித உணவக உரிமையாளர் செய்த செயல்.

துரைப்பாக்கத்தில் துரித உணவகத்தில் பயன்படுத்தும் கரண்டியை கொண்டு உரிமையாளர் செய்த செயல் வைரல் வீடியோவாக வெளிவந்துள்ளது.

துரித உணவகத்தில் பயன்படுத்தும் கரண்டியை கொண்டு சாக்கடை அடைப்பை சரி செய்த உணவக உரிமையாளர் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தில்லை பாண்டியன் ரெஸ்டாரண்ட்டில் துரித உணவகத்தில் பயன்படுத்தும் நீளமான கரண்டியை கொண்டு சாக்கடை அடைப்பை உணவக உரிமையாளர் சரிசெய்துள்ளார்.
இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த உணவகத்தை கடந்த ஒரு மாத காலமாக வேறு ஒருவரிடம் வாங்கி தற்போது பாண்டியன் என்பவர் நடத்தி வருகிறார்.
உணவிற்கு பயன்படுத்தும் கரண்டியை கொண்டு சாக்கடை அடைப்பை சரிசெய்யும் சம்பவம் சிக்கன் ரைஸ் உள்ளிட்ட ரைஸ் வகைகளை உண்ணும் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்ற செயல் மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

Tags

Next Story