தாம்பரம்: போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து அறிவுரை
தாம்பரம் போலீஸ் ஆணையரகத்திற்குட்பட்ட, காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு, தினசரி, ஆய்வாளர்கள் தலைமையில், ‛ரோல் கால்' நடைபெறும். அதில், போலீசாரின் அன்றைய தின பணிகள் மற்றும் முந்தைய நாள் பணிகளின் விபரங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு, அறிவுரை வழங்கப்படும்.
சமீபகாலமாக, தாம்பரம் போலீஸ் ஆணையரகத்திற்குட்பட்ட, காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே, இணக்கமற்ற நிலை நீடிக்கிறது.
இதை தவிர்க்க, காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களையும், புகார்தாரர்களையும் மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும், போலீசார் நடத்த வேண்டும்.குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை சீராக வைக்கவும், போலீசார் சுயநலமின்றி செயல்பட வேண்டும்.
காவல் நிலைய எல்லையில், போதை பொருட்களை அறவே ஒழிப்பதுடன், பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு எதிரான, குற்றங்களை தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
காவலர்கள் ஒவ்வொருவரும், தங்களின் உடல் நலனை பாதுகாக்க, சரியான உணவு முறை, உடற் பயிற்சியை பின்பற்ற வேண்டும் என்பன உட்பட, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu