சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
X

சென்னை பள்ளிகரணை மேம்பாலம் அருகே சென்ற மாநகர பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.

சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சைதாபேட்டையிலிருந்து ஒட்டியம்பாக்கம் செல்லும் தடம் எண் 51B மாநகரப் பேருந்தில் தினந்தோறும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணித்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பின்பு வெகு தூரம் ஓடி சென்று பேருந்தில் ஏறுவது, பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணிப்பது, ஜன்னல் பக்கவாட்டில் நின்றபடி பயணிப்பது என உயிரை பனையம் வைத்து தினந்தோறும் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆபத்தான நிலையில் பயணித்து வரும் பள்ளி மாணவர்களை பிடித்து அறிவரை வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business