பெரும்பாக்கம் கல்லூரி மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
Basic Facilities -சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட பெரும்பாக்கம் குடிசை மாற்று பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2015ம் ஆண்டு முதல் சென்னை பல்வேறு பகுதிகளிப் இருந்தும் குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்களை இங்கு கொண்டு வந்து குடியமர்த்தினர்.
சுமார் 1லட்சம் பேருக்கு மேல் வசித்து வரும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசுக் கல்லூரியும் இல்லாமல் இருப்பதால் இங்கு வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி செல்லும் நிலை இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 2020ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியும் கட்டப்பட்டது.
பள்ளி துவங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பள்ளிக்கு விளையாட்டு மைதானமும், சுற்று சுவரும் கட்டப்படவில்லை, இதனால் பள்ளியை சுற்றியுள்ள காலி இடத்தில் செடிகள் முளைத்துள்ளதோடு, ஆங்காங்கே மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாய் காட்சியளிக்கின்றது. அதிலேயே மாணவர்கள் விளையாடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே போல் அதற்கு சற்று அருகில் இருக்கும் அரசுக் கல்லூரியிலும் விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படவில்லை, கேண்டீன் இல்லை, பெரும்பாக்கத்தில் ஒதுக்கு புறமாக கல்லூரி அமைந்துள்ளதால் பேருந்து வசதியும் குறைவாக உள்ளதால் கல்லூரிக்கு தாமதமாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் மழை நீர் தேங்கி நிற்பதால் கல்லூரிக்கு செல்லவே முடியாத சூழல் உள்ளது, மழை நீரில் செங்கலை போட்டு அதில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. சாலை வசதியையும் மேம்படுத்தி கல்லூரி கட்டமைப்பையும் சீரமைத்து தரவும் மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறுத்து கல்லூரி பேராசிரியரிடம் விளக்கம் கேட்ட போது புதிதாக வந்த கல்லூரி ஒவ்வொரு பிரச்சினையாக தீர்க்கப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் உள்ளது, மழை நீர் தேங்குவதற்கு மண் கொட்டப்பட்டு வருவதாகவும், பகுதி முழுவதும் அப்படி தான் இருக்கிறது என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu