பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்
பள்ளிக்கரணையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன்
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அமைச்சர் மெய்யநாதன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ. அரவிந்த ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர், தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் திட்டத்தினை அறிவித்ததை அடுத்து, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆய்வு செய்யப்பட்டது. சதுப்பு நில பகுதிக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி சீரமைக்கும் பணி முதற்கட்டமாக செய்யப்படும். 7000 ஹெக்டேர் நிலம் உள்ள பள்ளிக்கரணை தற்போது 640 ஹெக்டேராக உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டு வனமாக மாற்ற திட்டம் மேற்கொண்டு வருகிறோம்.
வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒட்டுமொத்தமக மீட்டெடுக்க வேண்டும். இந்த சதுப்பு நிலத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் பறவைகள் இங்கு வந்து செல்லும். இதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் மீட்டெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
கடந்த10 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பராமரிப்பு சரியாக இல்லை. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்து பத்திர பதிவு செய்யப்பட்டதாகவும் மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சதுப்பு நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பத்திர பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu