தனியார் மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி விஷமுறிவு மருந்து கிடைக்க நடவடிக்கை: தமிழச்சி தங்கப்பாண்டியன்
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் குடியுருப்பு பகுதிகளில் புகுந்தன.
இந்நிலையில், பள்ளிக்கரணையில் ஒருவர் ஏசி மிஷினை சரி செய்ய முயன்றபோது, அதில் இருந்த பாம்பு தீண்டியது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பாம்பு விஷமுறிவு மருந்து இல்லை என கூறிவிட்டதால், உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில் விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்ட போதிலும், சிறிது தாமதமாக கொண்டு சென்றதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வந்த எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர், பாம்பு கடித்து இறந்தவர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது இறந்தவரின் குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் மருந்து இருந்திருந்தால் அவரை காப்பற்றி இருக்கலாம் என எம்பியிடம் கூறினர்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். மேலும் தனது முகநூல் பக்கத்திலும் இது பற்றி கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu