மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை: சென்னை மேயர்
சென்னை ஒ.எம்.ஆர் சாலை கண்ணகி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் எஸ்.டி ஆர்ட் இந்திய நிறுவனம் இணைந்து வரைந்த சுவர் ஓவிய திறப்பு விழாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவங்கிவைத்தார்.
உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து குடியிருப்புகளில் வரையப்பட்டிருந்த ஓவிய காட்சிகளை சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் பார்வையிட்டடனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு திடீரென சென்னை மேயர் பிரியா ராஜன் மருத்துவனையில் குறைகள் ஏதேனும் உள்ளதா என்றும் மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்கள் தேவைப்படுகிறதா என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவ வார்டு மற்றும் பொது வார்டுகளை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்றிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன் கூறுகையில், சுவர் ஓவிங்களை சிறப்பாக செய்துள்ளனர், இந்த பகுதியோடு இதை முடித்துவிடாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்துகேள்வி எழுப்பிய போது, கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu