கொரோனாவை அழிக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் கொரோனா தொற்றை அழிக்க சிறப்பு பூஜை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்தில் மஹா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 22 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மனை ஆயுர்தேவி என்று பக்தர்கள் அழைப்பார்கள் என்றும் எனவே உலகை அச்சுருத்தி வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கப்பட இச்சிறப்புமிக்க விசேஷ ருத்ரா அபிஷேகம் நடைபெற்றதாக ஆலயத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகங்கள், மஹா தீபாரதனைகள், மஹா கணபதி பூஜைகள், மஹா சங்கல்பம் மற்றும் பல்வேறு பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டன. குறிப்பாக குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும், வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை கிடைக்கப்பெறுவதாகவும் மனக்குறையோடு வரும் பக்தர்கள் நிறைவோடு செல்லும் சிறப்பு ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்திற்க்கும் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu