நன்மங்கலத்தில் சாலை ஆக்கிரமிப்பை மீட்ட வருவாய் துறையினர்.

நன்மங்கலத்தில் சாலை ஆக்கிரமிப்பை மீட்ட வருவாய் துறையினர்.
X

சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர்

நன்மங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்து இடத்தை அபகரிக்க முயன்றவர்களிடம் இடத்தை மீட்ட வருவாய் துறையினர்.

சென்னை நன்மங்கலம், எம்.ஆர்.நகரில் உள்ள முக்கிய சாலையில் சுமார் 18 சென்ட் இடத்தை ஏழுமலை என்பவரது மகன்களான ராமசந்திரன், பன்னீர் செல்வம், பூபாலன், ஆகியோர் சேர்ந்த வேலி அமைத்து ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
இந்நிலையில் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து நன்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன் தலைமையில், வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்த்து தெரிவித்து ஜே.சி.பி இயந்திரத்தின் முன்பு படுத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை மீட்க விடாமல் இடையூறு ஏற்படுத்தினர். பின்னர் பள்ளிகரணை போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தற்போது அந்த இடம் மீட்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்