சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில்  குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்
X

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பாகி உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 குடியிருப்புகளுக்கு படிவம் 6 கொடுக்க உள்ளதாகவும் அந்த படிவம் 6 கொடுத்த அடுத்த 3 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வீடுகளை அகற்ற வேண்டாம் எனவும், பட்டா வழங்கிடவும், வருவாய்துறையினர் வெளியே செல்லும்படியும் கோஷமிட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவ இடத்திற்கு சென்னை கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் ஏராளமான போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு வீடாக சென்று படிவம்-6 கொடுக்க சுமார் 50 வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!