மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் கைது

மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
X

மாணவிகள் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்

மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு போலீசார் செய்து கைது செய்தனர்.

சென்னை பள்ளிகரணை அடுத்த ஜல்லடையான்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆபிரகாம் அலெக்ஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு தொடுதல், ஆபாசமாக பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது, வாகனத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது என பல்வேறு வழிகளில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பேராசிரியரின் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்று அறை எடுக்கலாமா, மது அருந்தலாமா என்று மாணவிகளிடம் பேசியுள்ளார். இதனால் மாணவிகள் சக கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கடந்த 6ம் தேதி துறை தலைவர் பத்மநாபன் என்பவரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு முன்வைத்தும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டத்துல் ஈடுபட்டனர்.
உடனடியாக தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பின்னர் பேராசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

Tags

Next Story
ai solutions for small business