ஓஎம்ஆர் சாலையில் ஓசியாக டீ தரமறுத்ததால் கடை சூறை, பரபரப்பு

ஓஎம்ஆர் சாலையில் ஓசியாக டீ தரமறுத்ததால்  கடை சூறை, பரபரப்பு
X

ஓசி டீ கொடுக்காததால் சூறையாடப்பட்ட டீ கடை

ஓஎம்ஆர் சாலையில் ஓசி டீ, தரமறுத்ததால் போதையில் டீ கடையை சூறையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் ரியாஸ், இவர் அதே பகுதியில், ஃபேவரைட் ஸ்பாட் என்ற டீ ஷாப் நடத்தி வருகிறார்,

இவர் கடையின் அருகே விக்னேஷ் என்பவர் பெட்டிக்கடை நடத்திய நிலையில் இந்த டீ கடையில், டீ குடித்துவிட்டு காசு கொடுப்பதில்லை என கூறப்படுகிறது, இது குறித்து டீ கடை உரிமையாளர் ரியாஸ் கட்டிட உரிமையாளரிடம் வாய் மொழியாக சொல்லியுள்ளார்,

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் போதே டேபிள்,சேர்,சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கடையினுள் வீசியும் கடை உரிமையாளர் ரியாசை தாக்கியுள்ளர்,

இதனால் கடையில் இருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது, மேலும் அங்கு இருந்த வாடிக்கையாளர்களும் அச்சத்தில் சென்று விட்டனர், சுமார் அரைமணி நேரம் தக்குதல் நடத்திய நிலையில் விக்னேஷ் தப்பினார்,

இது குறித்து கடை உரிமையாளர் ரியாஸ் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் போலீசார் விக்னேஷ்யை தேடி வருகிறனர்,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!