சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் கடைகளில் போலீசார் ஆய்வு, குட்கா பறிமுதல்

சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் கடைகளில் போலீசார் ஆய்வு, குட்கா பறிமுதல்
X

செங்கல்பட்டு பகுதியல் மளிகை கடையில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

சோழிங்கநல்லூர் , செம்மஞ்சேரி பகுதியில் மளிகைகடை, டீக் கடையில் ஆய்வு செய்த போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாலையில் உள்ள குடந்தை மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையில் செம்மஞ்சேரி ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர்கள் ஐயப்பன், கோஷியா, பத்மநாபன் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் கடைக்குள் ஒரு பையில் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் பேசும்போது குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறினார்.

அதை தொடர்ந்து துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி சோதனையில் ஈடுபட்டு 6 கடைகளில் குட்கா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் சோழிங்கநல்லூரை சேர்ந்த சகாயராஜ்(39), அகமது(25), சதான் உசைன்(31), சையது(42), செம்மஞ்சேரியை சேர்ந்த ராஜா(35), சரத்குமார்(21), தாமோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story