கண்ணகி நகரில் விளையாட்டு மைதானம்: காவல் ஆணையர் திறந்து வைத்தார்
கண்ணகி நகரில் உருவாக்கப்பட்ட புதிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், எச் சி எல் அறக்கட்டளை துணைத் தலைவர் மற்றும் தேசிய கபடி வீராங்கனை அனிதா, தனியார் தொண்டு நிர்வாகிகள்
தாம்பரம் அடுத்த கண்ணகி நகரில் எச் சி எல் அறக்கட்டளை தனது சமூக பங்களிப்பு நிதியின் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 40,000 சதுர அடியில் விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளது.
தொண்டு நிறுவனமான டான் பாஸ்கோ அன்பு இல்லம் மற்றும் ஹோப் நிறுவனம், சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி மைதானத்தை உருவாக்கியுள்ளது.
இன்று இதனை எச்சில் அறக்கட்டளை துணைத் தலைவர் மற்றும் இயக்குனருமான டாக்டர் நிதிபுன்ந்தர், மற்றும் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஐபிஎஸ் மற்றும் தேசிய கபடி வீராங்கனை அனிதா ஆகியோர் திறந்து வைத்தனர்.
விளையாட்டு மைதானத்தை திறந்து தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், நல்ல சுற்றுச்சூழல் இளைஞர்களை தன்னம்பிக்கை மற்றும் அவர்களது இலக்கை அடைய பெரிதும் உதவும் என வாழ்த்து தெரிவித்தார்
இம்மைதானத்தில் வாலிபால், கபடி, கால்பந்து, ரக்ப்பி, கிரிக்கெட் மற்றும் 100 மீட்டர் தடகள மைதானம் என உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள இத்திடல் பெரிதும் உதவும்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் தங்கள் மன வளர்ச்சியையும் தைரியத்தையும் விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ள இது மேலும் உதவும். கண்ணகி நகரை பொறுத்தவரை நடுத்தர மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களது குழந்தைகளுக்கு இது பெரிய வரமாக அமையும்.
மைதானத்தை துவக்கி வைத்த அறக்கட்டளையின் துணைத் தலைவர் நிதி புனிந்தர், கல்வியின் ஒரு பங்கு விளையாட்டு என்பதும், அதன் மூலம் அனைவரும் சமம் என்பதும், கூட்டு முயற்சி மேற்கொள்ளுதல், விளையாட்டுத் திறனை மேற்கொண்டு எளிதில் வேலை வாய்ப்பு பெறுதலும், நல்வழியில் செல்ல இது பெரிதும் உதவும் என்பது ஐயமில்லை என தெரிவித்தார். இந்த விளையாட்டு மைதானம் அமைக்க பெரிதும் உதவிய சென்னை காவல் துறைக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
விழாவில் பேசிய தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஐ.பி.எஸ் கூறுகையில், கண்ணகி நகரில் ஏற்கனவே பல விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளதாகவும், தற்போது ந தேசிய அளவில் வெற்றி பெற்ற கபடி வீராங்கனை அனிதா இங்குதான் உள்ளார் என்பதும், எச் சி எல் நிறுவனம் தனது சமூக பங்களிப்பை, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடிசை மாற்று வாரிய பகுதிகளில் உள்ள குழந்தைகளை மேம்படுத்த நல்ல வளமான சுற்றுச்சூழலை உருவாக்குவதை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் காமினி ஐபிஎஸ், போப் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் இயன்கோரியா, டான் பாஸ்கோ அன்பு இல்ல நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூஸ் ஸ்டீபன், தேசிய கபடி வீராங்கனை அனிதா மற்றும் கண்ணகி நகர் இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் என பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu