புத்தாண்டு சாகசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

X
புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி சாகசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
By - S.Kumar, Reporter |2 Jan 2022 12:00 AM IST
புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி சாகசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு இரவன்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி இளைஞர் ஒருவர் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை ஆராய்ந்ததில், சென்னை தரமணியை சேர்ந்த விஜயன் என்பவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், விஜயன் தனது இருசக்கர வாகனத்தில் ஈ.சி.ஆர் சாலையில் அதிவேகமாக சென்றதை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, விஜயனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், விஜயனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu