இ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அறிவுரை

இ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அறிவுரை
X

போலீசார் முன்னிலையில் இளைஞர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை இ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

சென்னை கிழக்குகடற்கரை சாலை, கானத்தூர் அருகே பள்ளிகரணை போக்குவரத்து உதவி ஆணையர் ஸ்ரீதர் தலைமையில், ஆய்வாளர் சுகுமார் உள்ளிட்ட போலீசார் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிக எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் அதனை ஓட்டி வந்த இளைஞர்களை போலீசார் பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட இளைஞர்களிடம் போக்குவரத்து உதவி ஆணையர் ஸ்ரீதர் அறிவுரைகளை கூறி வாகனங்களை அதிவேகமாக இயக்க கூடாது, சாலையில் செல்லுவோர் மீது விபத்து ஏற்படுத்தகூடாது என்று எடுத்துரைத்தார்.


இறுதியாக அவர்களிடம் உறுதி மொழி ஏற்க வைத்தார். மூவர் வாகனத்தை ஓட்ட மாட்டோம். போக்குவரத்து விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டுவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், தேவையில்லாமல் வாகனத்தை எடுத்துக் கொண்டு சுற்ற மாட்டோம், நடந்து செல்பவர்களையும், சைக்கிளில் செல்பவர்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்த மாட்டோம், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போம். என்ற உறுதி மொழியை ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை