செங்கல்பட்டு அருகே அமமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
செங்கல்பட்டு அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் சேதமடைந்த கார்.
மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ஜெய்முருகன்.இவா் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறாா்.
அதோடு அமமுக அரசியல் கட்சியை சோ்ந்தவா். தென்சென்னை கிழக்கு மாவட்ட அமமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் அவா் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் (பார்க்கிங் பகுதியில்) காரை நிறுத்திவிட்டு ஜெய்முருகன் வீட்டிற்குள் இருந்தாா்.அப்போது பைக்கில் வந்த மா்ம ஆசாமிகள் ஜெய்முருகன் காா் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து பெட்ரோல் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இந்த சத்தம் கேட்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்தனா்.
அப்போது கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கார் தீப்பிடித்து புகைந்து கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.அதோடு மாடியிலிருந்த ஜெய்முருகனுக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன் பின்னர் தண்ணீரை ஊற்றி காரில் புகைந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் கார் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.
இது குறித்து ஜெய்முருகன் மடிப்பாக்கம் போலீசில் புகாா் செய்தாா்.மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் உரிமையாளர் அமமுக பிரமுகரும், வழக்கறிஞருமான ஜெய்முருகனிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் வெடிகுண்டு தடவியல் நிபுணரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து,வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டுகளின் சிதறல்கள் மற்றும் தடயங்களை சேகரித்தனா்.
இந்த பெட்ரோல் வெடிகுண்டுகள் வீச்சு சம்பவம் எதனால் நடந்தது? ஜெய்முருகனுக்கு தொழில் ரீதியாக மற்றும் அரசியல் கட்சி ரீதியாக யாரேனும் எதிரிகள் உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனா்.குடியிருப்பு பகுதியில் நடந்துள்ள இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu