பெரும்பாக்கத்தில் வியாபாரிகள் சங்க பெயர்பலகை திறப்பு விழா, விக்கிரமராஜா பங்கேற்பு

பெரும்பாக்கத்தில் வியாபாரிகள் சங்க பெயர்பலகை திறப்பு விழா, விக்கிரமராஜா பங்கேற்பு
X

 சோழிங்கநல்லூர் பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பெயர் பலகை திறப்பு விழாவில் விக்கிரமராஜா குத்து விளக்கு ஏற்றினார்.

சோழிங்கநல்லூர் பெரும்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கத்தின் பெயர் பலகையை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சயில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு சங்க கொடியினை ஏற்றி பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

பின்னர் குடிசை மாற்று பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை மற்று காய்கறி பொருட்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டு புத்தங்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்