தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி தெரிந்திருந்தால், மோடி தமிழர்களை தனது பேச்சால் மயக்கி இருப்பார் -திருமா
சென்னை பள்ளிகரணை 190 வது வார்டில் நடைபெறவுள்ள நகர உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இரா.பன்னீர்தாஸை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் :-
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நீட்டிக்கவில்லை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒருசில நாட்களிலேயே அதிமுக கூட்டணி சிதறிப்போனது. அதிமுக, பாஜக, பாமக அனைத்தும் தனித்துப் போட்டியிடுகின்றன, மற்ற கட்சிகள் என்ன ஆனது தெரியவில்லை, ஆளுக்கொரு திசையில் சிதறிக்கிடக்கிறார்கள், இது தான் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் உள்ள வேறுபாடு.
முதல்வரின் சிறந்த ஆளுமை மற்றும் தலைமை பண்பால் திமுக கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாகவும், அதிமுக கூட்டணியில் ஆளுமை வாய்ந்த தலைமை இல்லையென்றும், ஜெயலலிதா மறைந்து 5 ஆண்டுகள் கடந்தும் அதிமுகவிற்க்கு தலைவரோ பொதுச் செயலாளரோ நியமிக்க முடியாத நிலையில் அவர்கள் கூட்டணிக்கு எவ்வாறு சிறந்த தலைமையை நியமிக்கமுடியும். அதனால் தான் அதிமுக கூட்டாணி பலவீனமாகவும் திமுக கூட்டணி பலத்தோடு களத்தில் நிற்கிறது
பாஜக உண்மையான கட்சியல்ல, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரிவு, பிஜேபிக்கான அரசியல் திட்டங்களை வகுத்து தருவதும், என்ன சட்டம் வரவேண்டும் திட்டம் வரவேண்டும், மோடி மற்றும் அமிஷ்தா என்ன பேச வேண்டும், காஷ்மிருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும், முத்தலாக் சட்டத்தை கொண்டு வரவேண்டும், கர்நாடகவின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஹிஜாப் உடையை ஏற்கக்கூடாது தடை செய்ய வேண்டும் என தீர்மானீப்பாது பிஜேபி அல்ல ஆர்.எஸ்.எஸ்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி தெரியாததால், தமிழகத்தில் பிரதமர் மோடியின் ஜம்பம் பலிக்கவில்லை, இந்தி தெரிந்திருந்தால் வாய்ச்சவடால் அடித்து நம் மக்களை மயக்கி இருப்பார். ஆனால் கேந்திரி வித்யாலாய, சிபிஎஸ்சி மற்றும் தனியார் மத்திய அரசின் மூலமாக இந்தித்தை கற்றுக் கொடுத்து இந்தியை பேசும் கூட்டத்தை உருவாக்குகிறார் என பேசினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu