செம்மஞ்சேரியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் கைது

செம்மஞ்சேரியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் கைது
X

கண்ணகி நகரை சேர்ந்த சதீஷ்குமார்(21), அஜித்குமார் (19), 

செம்மஞ்சேரியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் கைது. 6 செல்போன்கள் பறிமுதல். 

சென்னை சோழிங்கநல்லூர் எச்.பி பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பவித்ரா என்ற பெண்ணிடம் கடந்த 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டனர்.

செல்போனை பறித்தவர்கள் தப்பியோடிய நிலையில் அது குறித்து பவித்ரா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையில், செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிய நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டது கண்ணகி நகரை சேர்ந்த சதீஷ்குமார்(21), அஜித்குமார் (19), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இவர்கள் மீது ஏற்கனவே துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, வேளச்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. செம்மஞ்சேரி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!