சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபர் கைது

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபர் கைது
X

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைதான மணிராமுடன் போலீசார் உள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய பகுதியில் சந்தேகிக்கும்படி இருந்த வடமாநில நபரை பிடித்து விசாரித்ததில் அவரது இருசக்கர வாகனத்தில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிராம்(45), என்பதும், பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து சிறு சிறு பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அந்த தகவலின் பேரில் அவரது வீட்டை பெரும்பாக்கம் போலீசார் சோதனை செய்த போது அங்கு 6 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தமாக 11 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் மணிராமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்