நன்மங்கலம் ஏரி நிரம்பியது : உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது

X
நன்மங்கலம் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
By - S.Kumar, Reporter |7 Nov 2021 2:45 PM IST
தொடர் கனமழையின் காரணமாக நன்மங்கலம் ஊராட்சி ஏரி நிரம்பியது. இதில் வெளியேறும் உபரி நீர் ஊருக்குள் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ஊராட்சியில் தொடர் கன மழையின் காரணமாக பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் பொது மக்கள்.
குறிப்பாக நன்மங்கலம், பொன்னியம்மன் காலடி தெரு, அம்பேத்கர் சாலை, வீரபாண்டிய நகர், இந்திரா நகர், அண்ணா நகர், கலைஞர் தெரு, கணேஷ் தெரு, இப்பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளனர்.
நன்மங்கலம் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
நன்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன், இடுப்பளவு தேங்கிய மழை நீரிலும் இறங்கிச் சென்று மக்களிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து மழை நீரை அகற்ற நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்.
பின்னர் அப்பகுதி மக்களின் உதவியோடு ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையின் ஒரு பகுதியை துண்டித்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu