தனியார் கல்லுாரியில் டிஜிட்டல் கல்வி மையம்: அமைச்சர் பொன்முடி துவக்கிவைத்தார்

தனியார் கல்லுாரியில் டிஜிட்டல் கல்வி மையம்: அமைச்சர் பொன்முடி துவக்கிவைத்தார்
X

தனியார் கல்லூரியில் அமைச்சர் பொன்முடி டிஜிட்டல் கல்வி மையத்தை துவக்கி வைத்தார்

கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் டிஜிட்டல் கல்வி மையத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கிவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் கல்லூரியில் (இந்துஸ்தான் கல்லூரி) மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை நவீனமயமாக்கும் வகையில் திறந்த மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று டிஜிட்டல் கல்வி மையத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது, அந்தகாலத்திலிருந்து தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகம் போன்றவை மூலமாக கல்வி நடத்தப்பட்டாலும், கணிணி அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், டிஜிட்டல் கல்வி மூலமாக வெகுதொலைவில், கிராமப்புறத்தில் இருக்கின்ற அனைவருக்கும் கல்வி கர்ப்பிக்கிற வாய்ப்பு உள்ளது.

இந்த கல்லூரியில் இதற்கான அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதை துவக்கி வைக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

அரசு கல்லூரியாக இருந்தாலும், தனியார் கல்லூரியாக இருந்தாலும் இந்த போட்டி மாணவர்களிடையே அறிவை வளர்க்கவும், வேலைதிறனை வளர்க்கவும் வாய்ப்பாக இருக்கும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!