பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் லாரி மோதி விபத்து : ஒருவர் பலி
X
சாலை விபத்தில் ஒருவர் பலி
By - S.Kumar, Reporter |12 Dec 2021 9:30 AM IST
பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொருவர் படுகாயம்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(33), சென்னை, மேடவாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இருசக்கர வாகனத்தில் துரைப்பாக்கம் நோக்கி ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புறம் வந்த தண்ணீர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. அந்த வாகனம் கோபால் ஓட்டி சென்ற வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பள்ளிக்கரணையை சேர்ந்த கணேசன்(34), என்பவர் எலும்பு முறிவுகளுடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்களத்தை சேர்ந்த பூவரசன்(25), என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu