செல்லும் இடமெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் லொள்ளு சபா' சேஷு

செல்லும் இடமெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் லொள்ளு சபா சேஷு
X

சாலையில் செல்லும் இடமெல்லாம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் லொள்ளு சபா சேஷு

சாலையில் செல்லும் இடமெல்லாம் லொள்ளு சபா சேஷூ விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

சென்னை மேடவாக்கம் சாலையில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு, ஒருவித ஒலி எழுப்பப்பட்டு வந்தது.
அருகில் சென்று பார்த்த போது ஒலி பெருக்கியில் பதிவு செய்யப்பட்ட குரலில் மழைக்காலங்களில் சாலையில் செல்லும் போது பள்ளங்களை பார்த்து செல்லவும், பழைய கட்டிடங்கள் அருகில் நிற்க வேண்டாம், வாகனங்களில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பானை பயன்படுத்த வேண்டாம், என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் பதிவி செய்யப்பட்ட குரலில் சொல்லிக் கொண்டே சாலையில் சென்று கொண்டிருந்தார் லொள்ளு சபா சேஷீ.
விசாரித்ததில் கடந்த ஒன்னறை வருடங்களாக கொரோனா விழிப்புணர்வை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் பரப்பி வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!