திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
X

திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகர் கிளை செயலாளர் கே.ஏ.டி.அன்பு ஏற்பாட்டில். நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒன்றினைவோம் வா திட்டத்தின்கீழ் கொரோனா நிவாரண உதவியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை திருப்போரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளருமான எல்.இதயவர்மன், வழங்கினார்,

இந்நிகழ்வின் போது, தி.மு.க., திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், திருப்போரூர் தொகுதியின் தகவல்தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், திமுக நிர்வாகி ஓஎம்ஆர் விஜி, மற்றும் திமுக இளைஞர் அணி,மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!