/* */

கஞ்சா விற்ற 3 பேர் கைது- 5 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது- 5 கிலோ கஞ்சா பறிமுதல்
X

சோழிங்கநல்லுார் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேளச்சேரியை அடுத்த தரமணி சப்இன்ஸ்பெக்டர் மோசஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தரமணி காவல் நிலைய பகுதியில் உள்ள ராஜாஜி தெரு எம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிய வர தனிப்படையினருடன் சம்பவ இடம் சென்று சோதனையிட்டதில் அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட 3 பண்டல் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . மேலும் கஞ்சா விற்பனை செய்த நபரான கார்த்திக்(20) என்பவரை கைது செய்தனர் .

மேலும் இவருடன் சேர்ந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சலீம் மொய்தீன்(24) மற்றும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த முகம்மது ஹபீஸ்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இவர்களை விசாரணை செய்ததில் தரமணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வேண்டி கடத்தி வந்தது தெரிய வந்தது . இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ததற்கு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 20 March 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்