சோழிங்கநல்லூர்அடுத்த பெத்தேல் நகர் பகுதிவாசிகளுக்கு படிவம் 7 நோட்டீஸ் வழங்கல்

சோழிங்கநல்லூர்அடுத்த பெத்தேல் நகர் பகுதிவாசிகளுக்கு படிவம் 7 நோட்டீஸ் வழங்கல்
X
பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் படிவம் 7 நோட்டீஸ் வழங்கினர்

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமார் 2,800 வீடுகளை அகற்ற, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதி மக்களுக்கு படிவம் 7 னை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு வருகை தந்தனர். உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் படிவம் 7 யை வழங்கிய போது அதை வாங்க குடியிருப்பு வாசிகள் மறுத்ததால் வீட்டின் வெளியே படிவத்தை ஒட்ட தொடங்கினர்.இந்நிலையில் அங்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!