சர்வதேச தரத்தில் மருத்துவர்கள் பயிற்சி மையம்; ஜெம் மருத்துவமனையில் துவக்கம்

சர்வதேச தரத்தில் மருத்துவர்கள் பயிற்சி மையம்; ஜெம் மருத்துவமனையில் துவக்கம்
X

சோழிங்கநல்லூர் அடுத்த பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சர்வதேச தரத்தில் மருத்துவர்களுக்கான பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் மருத்துவர்களுக்கான பயிற்சி மையம் சோழிங்கநல்லூர் ஜெம் மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சர்வதேச தரத்தில் மருத்துவர்களுக்கான பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய நுண்துளை அறுவை சிகிச்சை சங்கத்தின் சார்பில் நுண்துளை அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க இம்மையம் துவங்கப்பட்டுள்ளது.

ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் மருத்துவர் அபாய் டல்வி மற்றும் தேசிய தேர்வு வாரியத்தின் இயக்குனர் மருத்துவர் பவனிந்தர் லால் கலந்து கொண்டு மையத்தினை திறந்து வைத்தனர்.

இந்திய மருத்துவர்கள் பிரத்யேக பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்வதை தவிர்த்து உள்நாட்டிலேயே பயிற்சிபெறும் வகையில் இம்மையம் செயல்படும்.

மேலும், மருத்துவத்துறையில் அறிமுகப்படுத்தப்படும் நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த செய்யுமுறை விளக்க பயிற்சி மையமாக செயல்படும் வகையில் பயிற்சி மையமானது அமைக்கப்பட்டுள்ளதாக ஜெம் நிறுவன தலைவர் பழனிவேலு தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!