தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டனர்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டனர்
X

சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் தனியார் அறக்கட்டளை துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்ரமணியன்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் தனியார் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்க tab-யினை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 92.91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 52.05 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது, நைஜீரியாவில் இருந்து வந்திருந்த ஒருவருக்கு மட்டுமேஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோர் பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா முகாமில் கட்டாயமாக 7 நாட்கள் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!