மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் தற்கொலைக்கு முயற்சி
மனைவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய கரிக்காட்டுக்குப்பம், கானத்தூரில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான ராகவேந்திரா பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டினை கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பரத்துடு(வயது52), என்பவர் குடும்பத்தோடு தங்கி பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் -மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி சுஜாதா(48), கழுத்தை புடவையால் நெரித்து கொலை செய்து விட்டார். மனைவியை கொலை செய்து விட்டு தானும் பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கி இருந்தவரை அவரது மகன் வெங்கடேஷ் பார்த்து விட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu