கியூ. ஆர். கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்காவல்படை காவலர் கைது

கியூ. ஆர். கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்காவல்படை காவலர் கைது
X

கைது செய்யப்பட்ட ஊர்க்காவல் படை காவலர் ஸ்ரீதர்.

சென்னை துரைப்பாக்கத்தில் கியூ. ஆர். கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்காவல்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 32), இவர் அதே பகுதியில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி பே.டி.எம். கியூ. ஆர். கோடை கடையில் ஓட்டியுள்ளார்.

சில தினங்களாக வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தினாலும் தனது வங்கி கணக்கில் சேர வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆனந்த், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு பணம் சென்ற வங்கி கணக்கை கண்டறிந்து பார்த்த போது கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது.

ஸ்ரீதரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது காவல்துறையில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருவதாகவும், எளிதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் காவல்துறையில் பணியில் இருப்பது போல் போலி அடையாள அட்டை தயாரித்து வைத்துள்ளார்.

இதனை வைத்து பாரத் பே எனும் கியூ ஆர் கோர்டை வாங்கி கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் கியூ ஆர் கோடு மீது இதனை ஒட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதே போல் 7 கடைகளிலும் கியூ ஆர் கோடை ஒட்டியுள்ளார். அவரிடம் இருந்து கியூ ஆர் கோடு ஸ்டிக்கரை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil