தலைமறைவு குற்றவாளி கைது: தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு

தலைமறைவு குற்றவாளி கைது: தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு
X

நடராஜன்(எ) பாம்கை நடராஜன்.

சென்னையில் தலைமறைவு குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க சென்ற போது கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரும்பாக்கம் போலீசார் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நடராஜன்(எ) பாம்கை நடராஜன்(24), என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தேடிப் பிடிக்க சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் கத்தியால் வெட்ட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்கு என 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இவ்வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், இவருக்கு பிடி ஆணை வழங்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!