செங்கல்பட்டு அருகே மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது, ஓட்டல் எரிந்து சேதம்

செங்கல்பட்டு அருகே மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது, ஓட்டல் எரிந்து சேதம்
X
செங்கல்பட்டு அருகே ஆதம்பாக்கத்தில் மின் கசிவால் கேஸ் பைப் லைன் வெடித்து ஓட்டல் எரிந்து சேதமடைந்தது.
செங்கல்பட்டு அருகே ஆதம்பாக்கத்தில் மின் கசிவால் கேஸ் பைப்லைன் வெடித்து சிதறியது, ஓட்டல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆதம்பாக்கம் சப்வே அருகே தனியாா் ஒட்டல் ஒன்று உள்ளது. இரவு 9.30 மணியளவில் அந்த ஓட்டலின் பெயர் பலகையில் இருந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்தது.

அந்த ஒயா் ஒட்டலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு குழாய் மீது விழுந்தது. இதில் கியாஸ் குழாய் வெடித்து சிதறியது. அதோடு கியாஸ் குழாய் முலம் தீப்பிடித்து மளமளவென்று எரியத்தொடங்கியது.

மேலும் தீ ஒட்டல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.ஒட்டலில் இருந்த ஊழியா்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினா்.

உடனடியாக கிண்டி தீயணைப்பு வண்டி விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒட்டலில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் பொருட்களும்,சமையலுக்காக வைத்திருந்த உணவு பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இரவு 9 மணிக்கு மேல் வாடிக்கையாளா்கள் ஓட்டலுக்கு சாப்பிட வர அனுமதி இல்லை.எனவே அந்த நேரத்தில் ஒரு சில ஊழியா்கள் மட்டுமே உள்ளிருந்து சுத்தப்படுப்படுத்தும் பணியிலிருந்தனா்.

அவா்கள் சமையல் எரிவாயு குழாய் வெடித்து சிதறியபோதே அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டனா்.

இதே விபத்து ஒரு மணி நேரம் முன்னதாக நடந்திருந்தால், அப்போது ஓட்டலில் பலா் அமா்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனா்.மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.அதிா்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!