வாகனச்சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகள்; 3 கிலோ கஞ்சா பறிமுதல்

வாகனச்சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகள்; 3 கிலோ கஞ்சா பறிமுதல்
X

கஞ்சா விற்பனை செய்து கைதானவர்கள். 

பெரும்பாக்கம் ஏரி அருகே, வாகனச்சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெரும்பாக்கம், சர்ச் சந்திப்பில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் கனகதாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

வாகனத்தில் இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், பள்ளிகரணையை சேர்ந்த விக்னேஷ்(22), மாதவரத்தை சேர்ந்த எபினேசர்(எ) காளிதாஸ்(21) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பெரும்பாக்கம் ஏரி ஓரத்தில் மண்ணில் புதைத்து வைத்து பொட்டலம் போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் எரியில் புதைத்து வைத்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!