ஈஞ்சம்பாக்கம் புயல் பாதுகாப்பு முகாமில் ஏழை எளியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

ஈஞ்சம்பாக்கம் புயல் பாதுகாப்பு முகாமில் ஏழை எளியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
X

ஈஞ்சம்பாக்கம் புயல் பாதுகாப்பு முகாமில் ஏழை எளியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள புயல் பாதுகாப்பு முகாமில் ஏழை எளியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள புயல் பாதுகாப்பு முகாமில் ஏழை எளியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சமூக ஆர்வலர் கர்ணா தலைமையில் நடைபெற்ற முகாமில் வாழ்வாதாரம் இன்றி உடல்நலக் கோளாறு காரணமாக தவிக்கும் ஏழை எளியோர்களுக்கு ரத்த அழுத்தம், நரம்பியல், காயங்கள் என முழு உடல் பரிசோதனை கண் பரிசோதனை செய்யப்பட்டு தேவைபடுவோர்க்கு இலவச கண்ணாடிகள் வழக்கப்பட்டும் தீவிரமாக பாதிக்கப்பட்டோர்க்கு இலவச அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து வாரம் ஒரு முறை நடைபெறும் இம்முகாமில் கிழக்கு கடற்கரை சாலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் தொடர்ந்து வருகை புரிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!