அமுமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

அமுமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதுப்பாக்கத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்.

60 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுசேரி ஊராட்சி மாநகர போக்குவரத்து கழக மண்டல பொறுப்பாளர் அறிவகம் - குப்புலட்சுமி அறிவகம் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அம்மா தொழிற் சங்க மாநில தலைவர் இராஜி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் சங்கர மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள் ஒன்றிணைந்து சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண் பரிசோதனை செய்து அவர்களுக்கு உகந்த மூக்கு கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் முட்டுக்காடு முனுசாமி மருத்துவ பெட்டி வழங்கினார். முகாமில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!