/* */

குப்பை கிடங்குகளின் அருகில் தீயணைப்பு நிலையம்- அமைச்சர் நேரு தகவல்

தமிழகம் முழுவதும் குப்பை கிடங்குகளின் அருகில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு கூறினார்.

HIGHLIGHTS

குப்பை கிடங்குகளின் அருகில் தீயணைப்பு நிலையம்- அமைச்சர் நேரு தகவல்
X

குப்பை கிடங்கு தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

சென்னையை அடுத்த பெருங்குடியில் சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, காவல்துறை, மெட்ரோ குடிநீர் வாரியம் இணைந்து செயல்படுகிறது. 150க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். ஸ்கை லிப்ட் தீயணைக்கும் இயந்திரம் மூலம் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தீயணைப்புத்துறை டி.ஜி.பி. வி.கே.ரவி ஆகியோர் 100 அடி உயரம் மேலே சென்று குப்பை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் விஜயராஜ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடுமையான வெயில் காரணமாக குப்பைகளில் மீத்தேன் வாயு உருவானதால் தீ அதிகமாக பரவி உள்ளது. தீயணைப்பு துறை, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் என 3 துறைகளிலும் 300 பேர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.150 தண்ணீர் லாரிகள்,12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். கோடை காலம் முடியும் வரை இப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள குப்பை கிடங்குகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகையால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். அருகில் உள்ள பகுதிகளில் 3 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

தீ அதிகமாக பரவாமல் இருக்க தீ ஏற்பட்ட குப்பை கிடங்கு பகுதி மற்ற பகுதிகளில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது. தீ பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 225 ஏக்கர் குப்பை கிடங்கில் 15 ஏக்கர் பகுதி குப்பை கிடங்குகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கை அகற்ற உயிரி அகன்றெடுத்தல் முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள குப்பை கிடங்குகளின் அருகில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 28 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  3. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  7. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்