பள்ளி மாணவ மாணவிகளிடையே தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவ மாணவிகளிடையே தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பள்ளி மாவணவ, மாணவிகளுக்கான தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்புதுறை மற்றும் மீட்பு பணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளிடையே விபத்தில்லா தீபாவளி என்ற தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளிடையே தமிழ்நாடு தீயணைப்புதுறை மற்றும் மீட்பு பணி சார்பில் விபத்தில்லா தீபாவளி என்ற தீ தடுப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட அலுவலர் சையது முகமது ஷா தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் தீ ஏற்படும் பொழுது தீயணைப்பு கருவிகளை பயமின்றி கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கமானது அளிக்கப்பட்டது.
மேலும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பரவும் அபாய நேரத்தில் தீயணைப்பு துறையினரால் பயன்படுத்தப்படும் நீர்விடு குழாய் மற்றும் கிளைக்குழாய் வகைகள், கார்பன்டை ஆக்ஸைடு, எபிசி மற்றும் நுரை தீயணைப்பான் பற்றிய விழிப்புணர்வை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட அலுவலர் நமச்சிவாயம், பள்ளி தலைமை ஆசிரியர் தனலஷ்மி, துரைப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்சென்னை மாவட்ட அலுவலர் சைது முகமது ஷா பேசுகையில்,

கடந்த தீபாவளி பண்டிகையின் போது தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட 90 க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து 30 க்கும் மேற்பட்ட நீர் ஊர்திகளையும் ஆம்புலன்ஸையும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் புதிதாக மாடர்ன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!