பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ
X

பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ.  

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த தீயை, கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர்.

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில், இன்று மாலை 3 மணியளவில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் இடத்தில் தீப்பிடித்துள்ளதால் தீ மளமளவென பரவி வந்தது.

மேலும் வெயில் சுட்டெரிப்பதாலும் கொளுந்து விட்டு எரியும் தீயிலிருந்து புகை வானுயரத்திற்கு சென்றது. இதையடுத்து, திருவான்மியூர், துரைப்பாக்கம், மற்றும் மேடவாக்கத்திலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

மாலையில், 5 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீ, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீயினை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story