பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி

பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி
X

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளர் ஹரிராமன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது.

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹரிராமன்(58), சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர். குடும்பத்துடன் மாடம்பாக்கம், ஏ.எல்.எஸ்., நகரில் வசித்து வந்தார். 1986ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, சேலையூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வந்த, ஹரிராமன் கடந்தாண்டு, அக்டோபர் 27ம் தேதி, காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது, குடும்பத்தினருக்கு உதவ, முடிவு செய்த சேலையூர் சரக போலீசார், தங்களால் இயன்ற, நிதியை திரட்டினர். இது குறித்து, தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்களுக்கு தெரிவித்து, ஹரிராமனின் மனைவி ராஜேஸ்வரியை, ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை ஆணையர் ரவி வழங்கினார்.

Tags

Next Story