வேளச்சேரியில் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு

வேளச்சேரியில் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு
X

வேளச்சேரியில் சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விடுதி பெண்கள்.

சென்னை வேளச்சேரியில் அனுமதியின்றி இயங்கிய பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழிங்கநல்லூர் அடுத்த வேளச்சேரி டென்சி நகரில் ஷுலா ஜேன் எனும் பெண்கள் விடுதி இயங்கி வந்துள்ளது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வந்தனர். இந்நிலையில் கட்டிட உரிமையாளர் சேகர் மாணிக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாச்சியர் அதிகாரிகள் விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதில் முறையான ஆவணங்கள் இன்றியும், விதிமுறைகளை கடைபிடிக்காமலும் அறைகள் இருக்கமாக அமைந்திருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமின்றி விடுதியை நடத்தி வருவதால் விடுதிக்கு சீல் வைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு நோட்டீஸ் விடுதிக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைப்பதற்க்காக வந்தபோது விடுதியில் இருந்த 58 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கட்டிட உரிமையாளர் சேகருக்கும் விடுதியின் உரிமையாளர் ஷிபாவிற்க்கும் உள்ள பிரச்சனையில் கால அவகாசம் கொடுக்காமல் விடுதியில் தங்கி வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினால் நாங்கள் எங்கு செல்லவோம் என்று கேள்வி எழுப்பியதால் அரசு சார்பில் தற்காலி இடம் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதை ஏற்க மறுத்ததால் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிகாரியின் பேச்சு வார்த்தையில் ஒரு வார கால அவகாசம் அளித்ததின் பேரில் போராட்டமானது கைவிடப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு சீல் வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!