/* */

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி

மேடவாக்கத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி, மாடுகள் பலியாகின.

HIGHLIGHTS

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி
X

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பலியான மாடுகள்.

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், ரவி மெயின் ரோட்டில், உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அப்போது, மேய்ச்சலுக்காக சென்று கொண்டிருந்த 3 பசு மாடுகள், மற்றும் இரண்டு கன்று குட்டி உட்பட 5 மாடுகள், இந்த மின்கம்பியை மிதித்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து மாடுகள் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேடவாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் கேட்ட போது காற்றினால் இரு கம்பிகள் உரசி அறுந்து விழுந்திருக்கலாம் என விளக்கம் அளித்தனர். சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி